சென்னையை உலுக்கிய இரட்டை என்கவுன்டர்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அதிகாலையிலும் போலீசாரின் வாகன சோதனை நீடித்தது போது அதிகாலை 3.30 மணியளவில் ஒரு காரை மடக்கி உள்ளனர்.

அப்போது காரில் இருந்த சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோர் காவலர்களை தாக்கியதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர் செய்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் இருவர் மீதும் ஓட்டேரி போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்றச்சரித்திரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் என்கவுன்டரில் உயிரிழந்த வினோத் என்பவரது தாயார் ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழக காவல்துறையினரால் போலி என்கவுன்டர் மூலம் தனது மகன் வினோத் மற்றும் அவருடன் ரமேஷ் என்பவர் கொல்லப்பட்டதாக வழக்கத் தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கு டிஎஸ்பி அந்தஸ்து கொண்ட சிபிசிஐடி அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC orders transfer of kuduvancheri encounter case to CBCID investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->