MD, MS சேர்க்கையில் 30% ஊக்க மதிப்பெண்.. அரசின் கொள்கை முடிவு.! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் சேர 50 சதவீத அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 சதவீத இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு 30% ஊக்கம் மதிப்பெண் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் தங்களின் மேற்படிப்பிற்காக நுழைவு தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும்போது மக்கள் சேவையின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது. 

அவ்வாறு ஊக்க மதிப்பெண் வழங்கப்படுவதால்  மருத்துவம் மற்றும் அறிவியல் மேற் படிப்புகளில் உள்ள 50 சதவீத தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதனை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் குருபரன், சக்திவேல் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கி, தனியார் மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC ruled that cannot interfere with govt policy in medical education


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->