மதுரை சித்திரைத் திருவிழா.. டாஸ்மாக் கடைகளை மூடல் - மாவட்ட நிர்வாகம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுபானக் கடைகளை 6 நாட்கள் மூடக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், "மதுரை சித்திரை திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்டவை நடைபெறும். 

இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு முன்பு குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. அதனை தடுக்கும் விதமாக மதுரையில் 6 நாட்கள் மதுபானக் கடைகளை மூடினால் குற்றச்சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது.

எனவே மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள மதுபானக் கடைகளை ஏப்ரல் 30ம் தேதியிலிருந்து மே மாதம் 5ம் ஆம் தேதி வரை 6 நாட்கள் மூட உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, "மதுரை மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து, தேவை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும் நாளான மே 4ம் தேதி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai chithirai festival tasmac closed on May 4


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->