மதுரையில் பரபரப்பு: முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் தற்கொலை! கிடைத்த உருக்கமான கடிதம்! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41) இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி விஷாலினி (வயது 36) இவர்களது மகள் ரமிஷா ஜாஸ்பல் (வயது 12). 

ரமேஷ் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வாசித்துக் கொண்டு சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2 நாட்களாக ரமேஷ் குடியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. 

நேற்று மாலை வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது தொடர்பாக திருப்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரமேஷ் அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தனர். 

இதனை அடுத்து போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அவரது வீட்டில் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது, அதில், முன்னாள் ராணுவ வீரரான ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Ex soldier family commits suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->