ராஜாஜி மருத்துவமனையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!
madurai high court order audited in madurai rajaji hospital
மதுரை ராஜாஜி மருத்துவமனையின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சமீபத்தில் பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது "திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் சிவில் துறைத் தலைவர், மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
English Summary
madurai high court order audited in madurai rajaji hospital