போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சிறுவன் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!
madurai high court order compensation to children died police custody
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சிறுவன் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2019-ல் நடந்த நகை திருட்டு தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீஸார் எனது 17 வயது மகனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். எங்கள் வீட்டில் நடத்திய சோதனையிலும் நகை ஏதும் சிக்கவில்லை.
இருப்பினும் நகையைத் திருடியதாக ஒப்புக்கொள்ளும்படி எனது மகனை போலீஸார் சில நாட்கள் தங்கள் பொறுப்பில் வைத்திருந்து துன்புறுத்தியதுடன் அவன் மீது பொய் வழக்கும் பதிவு செய்தனர்.
இதையடுத்து தனது மகன் 2019 ஜனவரி 24ல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆகவே, எங்களுக்கு ரூ 50 லட்சம் இழப்பீட்டுடன், எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி தனபால், "மனுதாரர் குடும்பம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற தகுதி உண்டு. ஏற்கனவே அரசு ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதி இருபது லட்சத்தை அரசு வழங்க வேண்டும்.
கீழமை நீதிமன்றத்தில் போலீஸார் மீதான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அதன் இறுதி முடிவை பொறுத்து இழப்பீடு தொகையை யாரிடம் வசூலிப்பது என்று அரசு முடிவெடுக்கலாம். மேலும், அரசு வேலை கொடுப்பது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது. உள்துறை செயலாளர் தான் முடிவெடுக்க இயலும்" என்று கூறி உத்தரவிட்டார்.
English Summary
madurai high court order compensation to children died police custody