அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மன நல ஆலோசனை மையம் கட்டாயம் அமைக்க வேண்டும் - மதுரை உச்சநீதிமன்றம் உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெர்னிகா மேரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது:- 

தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிக அளவில் குற்ற வழக்குகள் பதிவாகின்றன. அதிலும் குறிப்பாக, பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வழக்குகள் அதிகளவில் பதிவாகி உள்ளன. இந்த காரணத்தால், பள்ளியில் படிக்கும் மாணவிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டில் ஆணை பிறப்பித்தது. அந்த ஆணைப்படி, மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்குவதற்கு நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த மையங்கள் பள்ளிகளில் முறையாக செயல்படுகின்றனவா? என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதற்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. 

அதன் பின்னர், இந்த மையங்கள் முறையாக செயல்படவேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் அதற்கான எந்த பலனும் இல்லை. எனவே, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அரசாணையின்படி அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடமாடும் மன ஆலோசனை மையங்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டும், இதுவரை நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்?

பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்களை முறையாக செயல்படுத்துவது மிகவும் அவசியம். இந்த மையங்கள் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court order to all school for Mental Health Counseling Centre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->