காவல் நிலையம் சூறை! விசிக நிர்வாகிகளுக்கு எதிரான வழக்கில் அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், கீரைத்துறை காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 9 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரை, கீரைத்துறை காவல் நிலைய போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மோகனா, லிங்கேஸ்வரி, சுமதி ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் தலைமையில் அக்கட்சியினர் காவல் நிலையத்துக்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல் நிலையத்தின் மீதும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாண்டியம்மாள், முத்து, பாஸ்கரன், அய்யன்காளை, மணிகண்டன், மீனாட்சி, உஷா ராணி, பாக்கியம், சுப்பிரமணி, மோகனா, லிங்கேஸ்வரி, சுமதி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வாழ்க்கை விசாரணை செய்த மதுரை மாவட்ட நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 9 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

மேலும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மோகனா, லிங்கேஸ்வரி, சுமதி ஆகியோரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Keeraithurai police station Attack case Judgement VCK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->