மதுரை மாவட்ட மக்கள் கவனத்திற்கு, முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.!
madurai peoples important announcement
தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் காரணத்தால் வைகை ஆற்றின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டி இருக்கின்றது. இதன் காரணமாக வைகை அணையிலிருந்து ஆற்றில் அதிகளவு நீர் திறக்கப்பட்டு வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றது.
மதுரையில் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன், மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதால் அணைக்கு வருகின்ற நீரை முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், "வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வர இருக்கின்றது. இதன், காரணமாக வைகை கரையோரம் இருக்கின்ற மக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் வைகை ஆற்றில் குளிக்க இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
madurai peoples important announcement