முதலிரவு முடிந்தவுடன் எஸ்கேப்.! 6 திருமணங்களும், அப்பாவி மாப்பிள்ளைகளும்.! கல்யாண பிளே கேர்ள்.. சிக்கிய கதை.!
madurai santhya cheat 6 members using marriage
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் அருகே இருக்கும் கள்ளிப்பாளையத்தில் தனபால் (35 வயது) என்பவருக்கு கடந்த செப்டம்பர் 7ல் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26 வயது) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பாலமுருகன் என்ற மதுரையைச் சேர்ந்த புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
பெண் வீட்டு சார்பில் பெண்ணின் அக்கா மற்றும் மாமா இருவர் மட்டுமே வந்தனர். திருமணம் முடிந்தவுடன் பெண்ணின் உறவினர்களும், புரோக்கரும் கமிஷனாக 1.50 லட்சம் ரூபாயை வாங்கி சென்றனர். பின்னர், சந்தியாவுடன் தனபால் தன்னுடைய புது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
திடீரென்று செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை எழுந்து பார்த்தபோது சந்தியா காணாமல் போயுள்ளார். அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. புரோக்கர் மற்றும் உறவினர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
பின்னர், வீட்டில் வைத்திருந்த பட்டுப் புடவை, நகை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு சந்தியா தப்பி ஓடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனபால் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இத்தகைய நிலையில், அதே பகுதியில் இருக்கும் ஒரு நபருக்கு சந்தியாவின் புகைப்படத்தை தனலட்சுமி என்ற (45 வயது) புரோக்கர் கொண்டு வந்து காட்டியுள்ளார்.
தன்னை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றியவர்களை தனபால் கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். இதனை தொடர்ந்து, உறவினர்கள் மூலம் தனலட்சுமியிடம் பேசி வேறொரு நபருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படங்களை மட்டும் பார்த்துக் கொண்டு போனிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் நடைபெற இருந்தது. அப்பொழுது, மணப்பெண் சந்தியா அவரது உறவினர் ஐயப்பன் (37 வயது) மற்றும் புரோக்கர் தனலட்சுமி மூன்று பெரும் காரில் வந்தனர். அந்த காரை ஜெயவேல் (38 வயது) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்கள் அனைவருமே மதுரையை சேர்ந்தவர்கள்.
அந்த பகுதிக்கு வந்தபோது சந்தியா ஏமாற்றிய தனபால் அங்கே இருப்பதைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து, சந்தியா மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரையும் பிடித்து தனபால் போலீஸிடம் ஒப்படைத்தார். அந்த கும்பலை விசாரித்ததில் இதுவரை சந்தியாவுக்கு ஆறு பேருடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு முதலிரவு முடிந்தவுடன் புரோக்கர் கமிஷனை பெற்றுக் கொண்டு தப்பிச் செல்வதை இந்த கும்பல் தொழிலாக கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் ஐயப்பன், ஜெயவேல், சந்தியா மற்றும் புரோக்கர் தனலட்சுமி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்.
English Summary
madurai santhya cheat 6 members using marriage