மதுரை | அரசு போக்குவரத்துக் கழகத்தில் 8 மணி நேர பணி - உயர் நீதிமன்றம் உத்தரவு - Seithipunal
Seithipunal


மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினருக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது: 

உயர் நீதிமன்ற கிளையில் போடி அரசு போக்குவரத்து கழக ஏஐடியுசி செயலாளர் சுந்தர் தாக்கல் செய்த மனுவில், 'திண்டுக்கல் மாவட்ட மண்டலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் சில தடங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்தினர்களுக்கு 24 மணி நேர வேலை வழங்கப்படுகிறது. 

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றுவதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். 

இதனால் போக்குவரத்து தொழிலாளர் அவர்களின் பணி நலன்களை கருதி நாளொன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது என்றும், 24 மணி நேர பணியை தடை செய்ய வேண்டும்' என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். 

இது குறித்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு முடியும் வரை மனுதாரர் சங்கத்தினரைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணி வழங்க கூடாது.  

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டது என்பதற்காக நடுவழியில் பேருந்து நிறுத்தி விட்டு செல்லக்கூடாது. 

இந்த இந்த மனுவுக்கு அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க வேண்டும். இது குறித்த விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று, நீதிபதி உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai State Transport Corporation 8 hours work high court orders


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->