மதுரை - தேனி இடையே சிறப்பு ரயில்வே சேவை.. இன்று முதல் நேரம் மாற்றம்.!
Madurai-theni special train time change
ரயில்வே துறை சார்பில் மதுரை-தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் நேரத்தில் இன்று முதல் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தற்போது மதுரை - தேனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், மதுரை-தேனி இடையே கடந்த மே 26-ம் தேதி முதல் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில்வே போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் மதுரை-தேனி இடையே சிறப்பு இரயில் நிலையத்தில் இன்று முதல் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி இந்த சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக 8.05 புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக காலை 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
அதே போல, தேனி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி வழியாக இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
English Summary
Madurai-theni special train time change