புதிய தலைமைச் செயலாளர் மீதான பழைய வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போதைய தமிழக தலைமைச் செயலாளரும் முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருமான சிவதாஸ் மீனா வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசு ஊழியரான அவர் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கடந்த 2016 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு 20% ஊதிய உயர்வு மற்றும் பணி இடைநீக்க காலத்தில் வழங்க வேண்டிய பலன்களை வழங்க கடந்த 2020 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

இதை எதிர்த்து அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும் அரசு ஊழியருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால்  உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தற்போது வரை அரசு செயல்படுத்தவில்லை. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தம் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரருக்கு 2021 ஆம் ஆண்டு மே மாதம் அரசு பணி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலகட்டத்தில் பெறவேண்டிய பண பலன்கள் வழங்கப்படவில்லை மனதார சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி எதிர்மனுதாரராக இருந்தும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து எந்தவித பதில் மனுவோ விளக்கமோ அளிக்கப்படவில்லை. இதிலிருந்து அரசு ஊழியர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அதேபோன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது 17.07.2023  அன்று அரசு தரப்பில் நீதிமன்றத்தின் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு அதிகாரிகளை இவ்வாறு செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த வழக்கில் எதிர் மனு அவதாரராக இருக்கும் அப்போதைய நகராட்சி நிர்வாகச் செயலாளரும் தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையும் அதே தேதிக்கு ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC directed Chief Secretary Sivadas Meena to appear in direct


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->