ஈஷா யோகா மஹாசிவராத்திரி விழா.. பக்தர்களுக்கு இலவச ருத்ராக்‌ஷங்கள்.! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் பக்தர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவர். அவ்வாறு இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் கடவுளின் ஆசிகளை பெறலாம் என கூறப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழா சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும். மேலும் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் பக்தர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவராத்திரி தினத்தன்று லட்சக்கணக்கான ருத்ராக்‌ஷங்களை சத்குரு அவர்கள் பிரதிஷ்டை செய்ய உள்ளார். இதில் சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷத்தை இலவசமாக பெற விரும்பும் பக்தர்கள் http://isha.co/rd என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maha Shivaratri free ruthraksham in Isha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->