திருவள்ளூர் || கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்சிசு.. காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


தனியார் மருத்துவமனையில் ஆண் சிசு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர்  அருகே தனியார் மருத்துவ கிளினிக் ஒன்று உள்ளது. இந்த கிளினிக்கின் கழிப்பறையில் ஆண் சிசு சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த சம்பவதன்று, இரண்டு பெண்கள் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கும் சிசு கண்டெடுக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனே. மேலும்,      மருத்துவமனையில் கருகலைப்பு நடக்கிறதா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Male infant found In Private Clinic Toilet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->