ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு பேருந்து நிலையம் ரயில் நிலையம் மணிக்கூண்டு போன்ற முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக சென்னை போலீசார் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அதன்படி, மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், இது பொய்யான தகவல் என தெரிந்ததும் மிரட்டல் கொடுத்தது யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வைத்து சந்தோஷ் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து 2 சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for making bomb threat to Erode bus station


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->