தூத்துக்குடி : காருக்கு வழி விடாத ஆத்திரம் - இளம்பெண்கள் மீது சராசரி தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு இளம் பெண்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் தங்களது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது ராஜாஜி பூங்கா முன்பு போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன்  அடுத்தபடி வந்து கொண்டிருந்தது. அதில் இருந்தவர்கள் மொபில் வந்து கொண்டிருந்த இரண்டு பெண்களையும் வழி விடுமாறு சத்தம் போட்டு உள்ளனர்.

பழைய பேருந்து நிலையம் அருகே அந்தப் பெண்களை வழிமறித்து காரில் இருந்து இறங்கி நபர் அவர்களை தாக்கி செல்போனை சேதப்படுத்திவிட்டு மொபட் சாவியையும் பறித்து சென்றுள்ளனர்.

இதில் இரண்டு பெண்களும் வளர்த்த காயம் அடைந்துள்ளனர். அவர்களை விட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்கு வழி விடாததால் ஆத்திரத்தில் இளம் பெண்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man attack two womans in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->