குற்றாலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.!!
man body rescue in kutralam
குற்றாலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அதனால், இந்த பகுதிக்கு தமிழகத்தில் இருந்து பல பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்த நிலையில், இன்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகைபுரிந்துள்ளனர். இதில் சில சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அறிவிக்கும், சிற்றருவிக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் அளவுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசியதால் இது குறித்து சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வாசிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி விரைந்து வந்த அவர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒரு பெரிய மரத்தின் அடியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே சம்பவம் குறித்து குற்றாலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- "பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் அது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து தெரியவரும் என்றுத் தெரிவித்தனர்..
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் குற்றாலம் மெயின் அருவி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man body rescue in kutralam