கன்னியாகுமரி : மகளுக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தை - மன உளைச்சலில் தந்தை தற்கொலை.!
man commit sucide for child born died to daughter in kanniyakumari
மகளுக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தை - மன உளைச்சலில் தந்தை தற்கொலை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே குழிக்கோடு வண்டாவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-கலா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில், இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
அவர்களில் இளைய மகள் அபிஷா கர்ப்பமாக இருந்துள்ளார். மகளின் பிரசவ செலவுகளை ராஜேந்திரன் பார்த்து வந்த நிலையில், குழந்தையின் எடை குறைவாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதாகவும் ராஜேந்திரன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்தார்.
இருப்பினும், பிரசவத்தின் போது குழந்தை இறந்த படி பிறந்துள்ளது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறியும் அவர் சமாதானம் ஆகவில்லை.
இந்நிலையில் ராஜேந்திரன் வீட்டின் அருகில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத்தில் மருந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைபார்த்த அவர் மனைவி கலா அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பின்னர் மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man commit sucide for child born died to daughter in kanniyakumari