மகளை கிண்டல் செய்த நபரை கொலை செய்த தந்தை.. தூத்துக்குடி அருகே பரபரப்பு...!
Man killed In Thoothukudi
நள்ளிரவில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துகுடி மாவட்டம், கரம்பவிளை சேர்ந்தவர் ராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளை கேலி செய்து வந்துள்ளார். அப்போது கடைக்கு சென்றிருந்த ராஜின் மகளை கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த ராஜ் மைத்துனர் ராஜ வடிவேலுவுடன் சென்று கண்ணனிடம் இதுபற்றி கேட்டுள்ளனர்.அப்போது கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் ராஜ் புகார் அளித்தார். காவலர்கள் விசாரணைக்காக காலையில் அவர்களை வர சொல்லியுள்ளனர்.
கண்ணன் ராஜ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈட்டுபட்டுள்ளார். ராஜ் மற்றும் ராஜவடிவேலு கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், கண்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Man killed In Thoothukudi