தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்த வாலிபர் - திடீர் மாயம்.!! - Seithipunal
Seithipunal


தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்த வாலிபர் - திடீர் மாயம்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

அதன் படி கோவில்பட்டி பகுதியில் இருந்து ஒரு வேனில் சுமார் 40 பேர் அம்பை அருகேயுள்ள ஆலடியூர் தாமிரபரணி ஆற்றுக்கு இன்று குளிப்பதற்காக வந்து உற்சாகக் குளியல் போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இந்தக் குழுவில் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் விக்னேஸ்வரன் என்பவர் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று திடீரென மாயமானார். 

தம் குழுவில் வந்தவர்களில் ஒருவர் திடீரென மாயமானதை அறிந்த குழுவினர் அவரை தேடியுள்ளனர். ஆனால், விக்னேஸ்வரன் கிடைக்கவில்லை. உடனே அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மாயமான நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். தாமிர பரணி ஆற்றில் குளிப்பதற்காக வந்த நபர் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man missing in tamirabarani river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->