சக மாணவர்கள் மத்தியில் விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவர் - தர்மபுரியில் பரபரப்பு.!
man sucide attempt school campous in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, தொப்பூர் அருகே செக்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த சிறுவன், சக மாணவர்கள் முன்னிலையிலேயே பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையறிந்த சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து ஓடிவந்த அவர்கள் அந்த மாணவனை சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி வளாகத்திலேயே சகா மாணவர்கள் மத்தியில் மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம் குறித்து, தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man sucide attempt school campous in dharmapuri