ஈரோடு || ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி - பதறியடித்து ஓடிய போலீஸ்.!
man sucide drama in erode collector office
ஈரோடு || ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி - பதறியடித்து ஓடிய போலீஸ்.!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஊஞ்சகாடு பகுதியை சேர்ந்த ராசு என்பவர் திடீரென ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு வந்து, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து திடீரென உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து ஓடி வந்து, அவரிடமிருந்து பாட்டிலை பறித்தனர். சிறிது நேரத்திலேயே அவரது சட்டை நீல நிறத்தில் மாறியது. இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் ஊற்றியது மண்ணெண்ணெய் இல்லை, தண்ணீரில் நீல கலரை கலந்து உடலில் ஊற்றினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் அந்தியூர் ஊஞ்சக்காடு பகுதியில் உள்ள பால் சொசைட்டியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கி விட்டார்கள். மீண்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை.
இது தொடர்பாக ஏற்கனவே மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் இவ்வாறு செய்தேன் என்றுத் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
man sucide drama in erode collector office