கன்னியாகுமரி : மகள் இறந்த துக்கத்தில் தூக்கு போட்டு தந்தை தற்கொலை..!!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : மகள் இறந்த துக்கத்தில் தூக்கு போட்டு தந்தை தற்கொலை..!! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறையன்விளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தோணி அமல்ராஜ்-சத்யகலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகள் அதேபகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் கடந்த மாதம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவருடைய குடும்பமே நிலை குலைந்து போனது. அதுமட்டுமல்லாமல், தன் மகள் இறந்தது குறித்து அந்தோணி அமல்ராஜ் புலம்பி வந்தார். 

இதற்கிடையே சத்யகலா, தன் மூத்த மகளுடன் தன் அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து அவர், கணவர் அந்தோணி அமல்ராஜ்க்கு தொடர்ந்து போன் செய்துள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சத்யகலா, பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் தகவல் சொல்லி பார்க்கச் சொன்னார்.

அதன் படி அவர்கள் போய் பார்த்தபோது அந்தோணி அமல்ராஜின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் படி போலீஸார் விரைந்து வந்து அந்தோணி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அங்கு அந்தோணி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட படி இருந்துள்ளார்.

உடனே போலீசார் அந்தோணி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மகள் இறந்த துக்கத்தில் தந்தை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide for grief over daughter death in kanniyakumari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->