ஏலசீட்டில் நஷ்டம் - மனைவி தலைமறைவானதால் மன உளைச்சலில் கணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஏலசீட்டில் நஷ்டம் - மனைவி தலைமறைவானதால் மன உளைச்சலில் கணவர் தற்கொலை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம் புத்தன்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டனி-உமா தம்பதியினர். இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஏலச்சீட்டு போட்டு இருந்தனர். 

இந்த நிலையில் உமாவுக்கு ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதனால் அவரால் உரிய பணத்தைத் பணம் கட்டியவர்களுக்கு திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், அவர்கள் வீட்டில் தினமும் ஏலசீட்டு பணம் கட்டியவர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.

இதனால், உமா என்ன செய்வது என்று அறியாமல் தலைமறைவானார். அதேநேரத்தில் வீட்டில் பணம் கேட்டு வருபவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், மனவேதனையில் ஆண்டனி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண்டனி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide for wife escape in kanniyakumari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->