குடும்பத் தகராறில் உயிரிழந்த டாஸ்மாக் கடை ஊழியர்.! சந்தேகம் இருப்பதாக தயார் புகார்.!
man sucide in rajapalaiyam for family problam
குடும்பத் தகராறில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்.! சந்தேகம் இருப்பதாக தயார் புகார்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். மதுபானக் கடையில் பணிபுரிந்து வரும் இவர் லதா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் நேற்று விக்னேஷிற்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டின் அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார். வெகுநேரம் ஆகியும் விக்னேஷ் கதவை திறக்காததால் சந்தேகப்பட்ட உறவினர்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷின் உறவினர்கள் அவரது உடலை எரிப்பதற்காக மயானத்திற்குக் கொண்டு சென்றனர். இதற்கிடையே விக்னேஷின் தாய் ராமலெட்சுமி தன் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ராஜபாளையம் தெற்கு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன் படி, போலீஸார் விரைந்து சென்று மயானத்திற்கு எரியூட்டுவதற்கு எடுத்து செல்லப்பட்ட விக்னேஷின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man sucide in rajapalaiyam for family problam