திருச்சியில் பரபரப்பு - காதலியை திருமணம் செய்து வைக்க கோரி செல்போன் டவரில் தவம் இருந்த வாலிபர்.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே நாகமங்கலம், நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். கட்டடத் தொழிலாளியான இவா் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ய விரும்பினார்.

இதன் காரணமாக அவர் கடந்த 2022, ஜூலை 17ஆம் தேதி சிறுமியை வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, போலீசார் சிறுமியை மீட்டதுடன் தினேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில நாட்கள் கழித்து வெளியில் வந்த அவா், காதலித்த பெண்ணுடன் மீண்டும் காதலை தொடர்ந்ததையடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனா். இந்த நிலையில், அந்த போக்ஸோ வழக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இது தொடா்பாக தினேஷுக்கும் அந்தப் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், அந்த பெண் கோபித்து கொண்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த தினேஷ் நாகமங்கலம் பகுதியிலுள்ள கைப்பேசி கோபுரத்தின் மேல் ஏறி உச்சிக்குச் சென்று, காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளாா். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸாா், தினேஷுடம் பேச்சுவாா்த்தை நடத்தியதுடன், அந்தப் பெண்ணையே திருமணம் செய்துவைப்பதாக இருவீட்டாரும் உறுதி அளித்தனா். இதையடுத்து தினேஷ் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்தாா்.

சுமாா் 5மணி நேரத்திற்கு மேலாக கைப்பேசி கோபுர உச்சியில் நின்றதால், உடல்நிலை பாதிக்கப்பட்ட தினேஷை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man threatened top of cellphone tower in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->