#சற்றுமுன் | புயலுக்கான 'ரெட்' அலெர்ட் - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான மாண்டஸ் 'தீவிர' புயல் வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டு உள்ளது.

மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், தொடர்ந்து கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 

மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி அளவில் இந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதிகாலை 2.30 மணி வரை இந்த புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த புயல் கரையை நெருங்கி விட்டது என்பதை குறிக்கும் விதமாக 'ரெட் மெசேஜ்' என்று சொல்லக்கூடிய சிகப்பு நிற எச்சரிக்கையை தற்போது, வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

வழக்கமாக கொடுக்கக்கூடிய சிகப்பு நிற எச்சரிக்கையை கடந்து, இது ஒரு அதி முக்கியமான ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

புயல் உருவாகும் போது அது மஞ்சள் நிற எச்சரிக்கையாக கொடுக்கப்படும். பின்னர் கரையை நோக்கி நகரும் பொது அது ஆரஞ்சு எச்சரிக்கையாக விடுக்கப்படும்.

தற்போது, புயல் கரையை நெருங்குவதால் சிகப்பு நிற எச்சரிக்கையாக வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandous Cyclone red massage


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->