மாஞ்சோலை விவகாரம் : ஒரு மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அளித்த  மனுவின்  அடிப்படையில்,  தேசிய மனித உரிமை ஆணையம், குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் மற்றும் ஆணையத்தின் நீதிபதி விஜயா பாரதி சயானிடம்  கடந்த 20ம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.

இதையடுத்து புதிய தமிழகம் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவின் தலைமை இயக்குநர் அடங்கிய அதிகாரிகளை கொண்ட குழுவை நியமித்துள்ளது. அந்த குழு கள நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தி, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manjolai issue National Human Rights Commission orders to submit report within one month


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->