"பேராசை.. பெருநஷ்டம்" எந்த ஆடை எடுத்தாலும் ரூ.4.. கடையில் நுழைந்த கஸ்டமர்கள்.. வெளிவந்த போது அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ஓரிரு ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொண்ட பொருட்களை இழந்த நிலை ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் ஜவுளி கடை ஒன்று துவங்கப்பட்ட நான்காண்டுகள் ஆகியுள்ளன. இந்த நான்காம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடை ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 

அதன்படி நேற்று முதலில் ஆடை வாங்கும் 400 பேருக்கு எந்த ஆடையை எடுத்தாலும் நான்கு ரூபாய்க்கு விற்கப்படும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடையில் நான்கு ரூபாய்க்கு ஆடைகளை வாங்க முண்டியடித்து கூட்டம் முன்னேறியது.

இதனால், கடை அமைந்துள்ள ருக்மணிபாளையம் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. அப்பொழுது ஆடை வாங்க பலரும் போட்டி போட்டுக் கொண்டு கடைக்குள் முண்டியடித்து நுழைந்ததால் தங்களது கை பைகள், பர்சுகள், விலை உயர்ந்த கைபேசிகள் உள்ளிட்ட பல விலை கொண்ட பொருட்களை தவற விட்டுள்ளனர்.

ஓரிரு ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொண்ட பொருட்களை இழந்த நிலை ஏற்பட்டது. இதனால், பலர் கண்ணீருடன் சென்றுள்ளனர். பேராசை, பெருநஷ்டம் என்ற வார்த்தைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mannarkudi Dress Shop offers and next the peoples are losses their money and purse etc 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->