தன்னை கடித்த பாம்பை, மடக்கி பிடித்த தர்மன், அலறி அடித்து ஓடிய மக்கள்.!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே தன்னைக் கடித்த பாம்புடன், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் : மன்னார்குடியில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவர் நேற்று தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடையில் மது அருந்திவிட்டு, குடிபோதையில் வீட்டில் படுத்து கிடந்துள்ளார்.

அப்போது சாரைப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் விழித்துக்கொண்ட தர்மன், அந்த தன்னைக் கடித்த அந்த பாம்பை மடக்கிப் பிடித்து, உடனடியாக பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

கையில் பாம்புடன் வந்த தருமனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மருத்துவமனை ஊழியர்களும் ஒருசமயம் பதட்டம் அடைந்தனர்.

பின்னர் அவர் கையில் வைத்திருந்த பாம்பு சாரை பாம்பு என்பதால், சாரைப்பாம்பிற்கு விஷம் கிடையாது இல்லை என்பதால், தர்மனுக்கு உரிய சிகிச்சையை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mannarkudi snake bite young man


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->