நடிகை திரிஷா விவகாரதில் கை விரித்த உயர்நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மன்சூர் அலிகான்.!!
Mansoor Ali Khan case postponed to feb7
நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தான் பேசிய முழு வீடியோவை பார்க்காமல் தனது நற்பெயருக்கு கலங்கம் கற்பித்தாக குற்றச்சாட்டி நடிகை திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடர்பட்டதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த அபராத தொகையை 2 வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செலுத்தி அது குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அபராத தொகையை தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு கால அவகாசம் பெற்றுவிட்ட பின் எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பி நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்ததோடு உத்தரவை திரும்ப பெற கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் என கூறி வழக்கு விசாரணை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
English Summary
Mansoor Ali Khan case postponed to feb7