மாண்டஸ் புயல் : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழப்பு.!
mantus storm weakening to deep air depression
தமிழகத்தில் கடந்த அக்டர்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் புயலாக வலுவடைந்தது.இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாண்டஸ் புயல் இரவு 2.30 மணியளவில் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அந்த நேரத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே கரையை கடந்த 'மாண்டஸ் புயல்' ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. மேலும், இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
mantus storm weakening to deep air depression