பொதுமக்களின் கவனத்திற்கு..! நீதிமன்றங்களில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்..!!
Masks are mandatory in courts from today
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பரவல் தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தமிழகத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் 3,195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், கிழமை நீதிமன்றங்களில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குகளுக்காக நீதிமன்றம் செல்வோர் என அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம். தனிமனித இடைவெளி அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் வகையில் மாவட்ட முதன்மை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழக்கு பட்டியலில் இடம்பெறாத நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் இன்று முதல் தமிழக முழுவதும் நீதிமன்றங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
English Summary
Masks are mandatory in courts from today