மயிலாடுதுறை: இரவு நேரத்தில் வந்து விழும் கற்கள்! பதறிய மக்கள்.. வீதியில் இறங்கி போராட்டம்! - Seithipunal
Seithipunal


சீர்காழி அருகே மது போதையில் வீடு மட்டும் கடைகளில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் உள்ள கடைகள் மற்றும் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இரவு நேரத்தில் மது போதை கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கும்பல் இரவு நேரத்தில் இந்த பகுதிகளில் உள்ள வீடு மற்றும் கடைகளின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதன் காரணமாக வீடு மற்றும் கடைகளில் சேதம் ஏற்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். 

இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதால், இன்று இந்த பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் நிலைய போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது. 

இதனை அடுத்து போலீசார் தரப்பில் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் அந்த பகுதிகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Nemmeli village people protest


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->