மாணவர்கள் கவனத்திற்கு.. MBBS மற்றும் BDS மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு http://www.tnhealth.tn.gov.in, http://www.tnmedicalselection.org ஆகிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது.

இதில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு சுமார் 27 ஆயிரம் மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 13,000 மாணவர்கள் என மொத்தம் 40 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS and BDS courses application Last day today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->