தமிழ்நாட்டில் "MBBS கலந்தாய்வு" எப்போது? அமைச்சரின் அதிகாரப்பூர்வ தகவல்.!!
MBBS counseling in TamilNadu likely to be starts on July25
தமிழ்நாடு அரசின் கீழ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.
அதேபோன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற 5 நாட்கள் கழித்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே ஜூலை 17ஆம் தேதி தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூலை 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேதியும் அதிகாரப்பூர்வ தேதியாக அறிவிக்கப்படவில்லை.
எனவே தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் இளநிலை மருத்துவ படிகள் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த 5 நாட்களுக்குப் பிறகு தமிழக அரசின் கீழ் இருக்கும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
English Summary
MBBS counseling in TamilNadu likely to be starts on July25