வீரப்பனின் நண்பன் மீசைக்கார மாதையன் மறைவு! கடைசிவரை நினைவு திரும்பவில்லை! 31 ஆண்டுகால சிறைவாசம்! - Seithipunal
Seithipunal


வீரப்பனின் நண்பன் மீசை மாதையன் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 1993ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது, 4 தடா வழக்குகள் பதியப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட போதிலும் கர்நாடக மாநில அரசு அவரை விடுதலை செய்யவில்லை.


மீசைக்கார மாதையன் பின்னணி : 

தமிழக உரிமைகளுக்கவும், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் காவலனாகவும் வாழ்ந்து மறைந்த வீரப்பனின் கூட்டாளிகளில் முக்கியமானவர் மீசைக்கார மாதையன். 

கடந்த 1993 ஆம் ஆண்டில் வீரப்பனிடமிருந்து பிரிந்து செங்கப்பாடிக்கு வந்த மீசைக்கார மாதையன், கர்நாடக மாநில போலீசில் சரணடைந்தார். மேலும், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோரும் சரணடைந்தனர்.

இவர்கள் நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் ஒன்பது ஆண்டுக்காலம் தாழ்த்க்கப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் 2014இல் நால்வரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போதிலும், கர்நாடக மாநில அரசு நால்வரையும் விடுதலை செய்யாமல் இருந்தது.

இதில், 2018-ல்  சைமன், 2022-ல் பிலவேந்திரனும் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் சிறுநீரக பாதிப்பால்  ஞானபிரகாசம் பரோலில் வெளியே வந்தார். 

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி நினைவிழந்த நிலைக்கு சென்ற மீசை மாதையன் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். வீரப்பன் நண்பர்களில் சிறையிலிருந்த கடைசி நபர் மீசைக்கார மாதையன் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meesaikara maathaiya death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->