மனநலம் பாதித்த மகன்... தந்தையை அடித்துக்கொன்ற பரிதாபம்... பெரம்பலூரில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் மனநல பாதித்த மகன் தந்தையை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜ்(65). இவரது மகன் அசோக் ராஜ் (23) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அசோக்ராஜுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் அசோக்ராஜ் சிகிச்சை பெற்று சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்து மூன்று மாதங்களாக சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருந்த அசோக் ராஜ் வீட்டில் உள்ளவர்களை அடிக்கடி கண்மூடித்தனமாக தாக்கி வந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு தாயையும் அசோக் ராஜ் தாக்கியதால், அவர் அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த தந்தை செல்வராஜை அசோக்ராஜ் கம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உறவினர் வீட்டிற்கு சென்ற தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவர் செல்வராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குன்னம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட அசோக் ராஜை கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்த செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mentally challenged son who beat his father to death in Perambalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->