மனநலம் குன்றிய கிறிஸ்துவப் பள்ளி மாணவர்கள் கழிவறையை கழுவிய பகீர் சம்பவம்.!
mentally challenged students wash school toilet in sivakasi
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அரசு உதவி பெறும் கிறிஸ்துவ (CSI) பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 80 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் கல்வி கற்கும் மனநலம் பாதிக்கபட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி விடுதியின் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கிறிஸ்துவ பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த போது, இங்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் என்பவர் தனக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததால் பள்ளியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்" என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேராயர் தலைமையில் விடுதி இயக்குநர் விசாரணை நடத்த உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் கூறியது போல் ஆசிரியரால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டது அல்லது தினமும் மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
English Summary
mentally challenged students wash school toilet in sivakasi