கடும் வறட்சி - மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறக்காததால் விவசாயிகள் கவலை!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக ஜூன் 12ம் தேதி அன்று குறுவை, சம்பா சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும். இந்த நீர் டெல்டா மாவட்டங்களான சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் விவசாய சாகுபடிக்காக திறந்து விடப்படும்.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட வருடத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி 18 முறையும், அந்த தேதிக்கு முன்னராக 11 முறையும் டெல்டா பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து விட வேண்டிய தண்ணீர் இன்னும் திறந்து விடப் படவில்லை. 

மேலும் தென்மேற்குப் பருவமழையும் பொய்த்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென சரியத் தொடங்கியது. தற்போது அணையின் நீர் மட்டம் 45 அடிக்கும் கீழாக உள்ளது. எனவே இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு நீர் திறந்து விட வாய்ப்பில்லை என்று விவயாசிகள் கவலையில் உள்ளனர்.

முன்னதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, கர்நாடகா ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டி. எம். சி தண்ணீர் திறந்து விடவேண்டும். ஆனால் கடந்த ஆண்டு கர்நாடக அரசு அம்மாநில அணைகளில் குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக கூறி வெறும் 75.91 டி. எம்.சி தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Dam is not Open For Irrigation Due to Drought


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->