மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சேலம், மேட்டூர் அணையில் நீர் முழுமையாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக அதன் சுற்றுப்புறத்திலுள்ள 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேட்டூர் அணையிலிருந்து கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.28 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், நீர்மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து முதல் கட்டமாக விநாடிக்கு 25,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு வந்த நீரில் 1.23 லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

காவிரி கரையோர பகுதிகளுக்கும், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சேலம், மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான  ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், கரூர், அரியலூர், திருச்சி,  திருவாரூர், ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam open july 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->