வேப்பமரத்தில் இருந்து திடீரென வடிந்த பால் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
milk come from neem tree in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்துக்கரை பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் இருந்து நேற்று மாலை பால் வடிந்துள்ளது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து விட்டு அருகே உள்ள ஊர்மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு ஓடி வந்த ஊர்மக்கள் அம்மன் விரும்பும் மரமான வேப்பமரத்தில் இருந்து பால் வருவதை பார்த்து அந்த மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்றும் அந்த மரத்தில் இருந்து பால் வடிந்தால் தொடர்ந்து அந்த மரத்திற்கு வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த செய்தி அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து ஊர்மக்கள் மற்றும் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இறங்கி வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்ததாவது, வேப்பமரத்தில் இருந்து பால் வடிவது மிகவும் அபூர்வமாகும். இது தெய்வ சக்தியான மரம் என்று தெரிவித்தனர்.
English Summary
milk come from neem tree in thoothukudi