தி.மு.க.- விசிக அண்ணன் தம்பி உறவு - அதிரவைத்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர தி.மு.க. இளைஞர் அணியின் சார்பாக தமிழக துணை முதலமைச்சர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. 

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொற்கிழி வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- "தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

தற்போது பி.டி. அசிஸ்டன்ட் 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் உள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதேபோல், இடைநிலைப் பள்ளி ஆசிரியர் பணிக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்கு உண்மையாக உழைக்ககூடியவர்களாக இருக்கிறோம். மக்களுக்கு பயன்படும் வகையில் நல்ல ஆட்சியை தி.மு.க. தந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தை துணை பொதுச்செயலாளர் கூறிய கருத்துக்கள் குறித்து அவர்கள் இயக்கத்துக்குள் பேசி முடிவு செய்து கொள்வார்கள். தி.மு.க.- விசிக கூட்டணி அண்ணன், தம்பி உறவோடுதான் உள்ளது. 

இது கொள்கைக்கான கூட்டணி. அதனால்தான் இந்த கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணியில் பிளவு ஏற்படாதா என்று நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதெற்கெல்லாம் நாங்கள் இடம் தரமாட்டோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil magesh speech about vck party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->