நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவனின் கல்விச் செலவை நானே ஏற்கிறேன் - அன்பில் மகேஷ்.!
minister anbil makesh tweet about nanguneri incident
நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவனின் கல்விச் செலவை நானே ஏற்கிறேன் - அன்பில் மகேஷ்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியினர். இவர்களுக்கு சின்னதுரை என்ற மகனும், சித்ரா செல்வி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் சக மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை வீடு புகுந்து வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குகே கொண்டுச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக 17 வயதுடைய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார்கள் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சமூக நீதிக்கான அரசு இது. பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நாளைய தமிழ்ச் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
minister anbil makesh tweet about nanguneri incident