மழை பாதிப்பு - சீரமைப்பு பணியை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. அதிலும், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர், அமைச்சர்கள், என்று பலரும் காலா ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர். 

மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வெள்ளப்பாதிப்பு பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister appointed for charge in flood affected districts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->