சர்ச்சையான சாராய விவகாரம்.. கலால் துறைக்கு கிடுக்கு பிடி.. செந்தில் பாலாஜி போட்ட அதிரடி உத்தரவு..!!
Minister directs Excise dept to monitor Tasmac bars
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கள்ளச்சாராயண விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டதால் 23 உயிர்கள் பலியானதாக குற்றம் சாட்டை வருகின்றன. இந்த விவகாரத்திற்குபொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்து உள்ளது.
மேலும் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பார்கில் போலி மதுபானங்கள் விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் தஞ்சையில் இருவர் அரசு அனுமதி பெற்ற பாரின் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்ததில் திடீரென உயிரிழந்தனர். இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை கலால் பிரிவு ஆணையர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால் உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகள், மதுபான உரிமம் பெற்ற கிளப், மதுபான உரிமம் பெற்ற ஹோட்டல் ஆகியவை கண்காணித்து, விதிமுறைகள் ஏதேனும் மீறி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறதா…? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆலைகளின் உற்பத்திக்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைகளில் வெளி மாநில சாராயங்கள் விற்பதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Minister directs Excise dept to monitor Tasmac bars