விபத்தில்லா தமிழகம் - வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய அமைச்சர்..!!
minister dm anbarasan provide helmate
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு வாகன ஓட்டிகள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்ற உத்தரவை தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கவும், போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி திமுக சார்பாக மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப் பாளர் கே.கே.சண்முகம் தலைமையில் சுமார் 100 பேருக்கு தலைக் கவசம் வழங்கும் விழா ஆலந்தூர் ராஜா தெரு மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் அணிவித்து அதன் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து அறிவுறுத்தினார்.
இதேபோல், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எல்லையில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் விதமாகவும், விபத்தில்லா தாம்பரம் மாநகரத்தை உருவாக்கும் வகையிலும், போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
English Summary
minister dm anbarasan provide helmate