அமைச்சர் எ.வ வேலுவின் மகன் கம்பன் கார் விபத்தில் சிக்கினார்.!!
Minister evvelu son kamban car meet accident in Tiruvannamalai
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கும் எ.வ வேலு மகன் கம்பன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் அமைச்சர் எ.வ வேலுவின் மகன் கம்பன் சென்ற கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரின் மகன் கம்பனுக்கு என்ன ஆனது என்பது குறித்தான தகவல் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Minister evvelu son kamban car meet accident in Tiruvannamalai