அதிமுக ஆட்சியில் தான் டெங்கு இறப்பு அதிகம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் டெங்கு மரணங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்,

அதாவது, "ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை என்று மூன்று துறைகளையும் சேர்த்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கூட்டம் நடைபெறவில்லை. 

பருவமழையின் போது நிச்சயமாக எந்த பாதிப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பே சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ச்சியாக போடப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சலுக்கு உடனடியாக முகாம் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அக்டோபர் 15 ஆம் தேதியிலிருந்து மழை தொடங்கிய பிறகு தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தப்படும். டெங்கு, மலேரியா காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். 

தமிழ்நாட்டில் எங்கே டெங்கு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரை காட்டச்சொல்லுங்க. அ.தி.மு.க. ஆட்சியில் தான் 2012ல் டெங்கு இறப்பு 66 பேர், 2017ல் 65 என்று இருந்தது. அதற்கு பின் ஒற்றை இலக்கு தான். ஒன்பது மாதம் கடந்து டெங்கு இறப்புகள் இந்த வருடம் ஆறு பேர் தான்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister m subramaniyan explain eps report dengue fever death issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->